அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Monday 31 July 2017

பணி ஒய்வு பாராட்டு!!!!!!!!!

நாகப்பட்டினம் பகுதி அஞ்சல் மூன்றின் செயல் வீரரூம், கீழையூர் துணை அஞ்சலக தலைவருமான திரு.K.செளந்தர்ராஜன், அவர்கள் இன்று 31.07.2017 பணி ஒய்வு பெறுவதால், எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கிறோம்.

வாழ்த்துக்களுடன்
NFPE-P3,P4 & GDS

நாகப்பட்டினம் & திருவாரூர்

Wednesday 19 July 2017

வருந்துகிறோம்!

நாகை கோட்ட NFPE-GDS சங்கத்தின் தலைவரும், திருக்கண்ணங்குடி கிளை அஞ்சலக தலைவருமான திரு.M.வீரமணி அவர்கள் நேற்று இயற்கை எய்திவிட்டார்கள். அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்

NFPE-P3, P4 & GDS

Sunday 2 July 2017

ஜூலை 1
புதிய இன்கிரிமெண்ட் குள் நுழைகிறோம் .
GST எனும் வரி சவுக்கடி களை வா(தா) ங்கதான்   போகிறோம் 
போராட்ட களத்தை இழந்துவிட்டு   நிராயுதபாணியாய்
அலவன்சுகள் எனும் பெயரில் அரசாங்கத்தின் அசைந்து
கொடுக்காத நிலையினை ஏற்று கொள்ள போகிறோம்    
மீண்டும் வட்டி குறைப்பு இருந்தாலும் வரிந்துகட்டி கொண்டு 
புதுக்கணக்குகளை தொடங்க அச்சுறுத்த படப்போகிறோம் 
பேச்சுவார்த்தைக்கு கூட வரமறுக்கும் நிர்வாகத்தை எதிர்த்து 
அவசர அவசரமாக போராட போகிறோம் 
 அரசாங்கத்தின் துரோகத்தை மறந்து ஏனோ 
திசைமாறி வசைபாடி கொண்டிருக்கிறோம் 
பொறுமை காத்து --யாருக்கோ 
பெருமை சேர்க்கிறோம் 
பொங்க வேண்டிய நேரத்தில் எதற்கோ 
மங்க தொடங்கிவிட்டோம் 
புரட்சிகளை மறந்து விட்டு 
பொதி சுமக்க பழகி விட்டோம் 
இருந்தாலும் 
இறுதி வெற்றி நமதே என்றே 
இனிய வரிகளை உச்சரித்தே 
உறுதி காக்கிறோம் --இயக்கங்களின் 
உயர்வை பார்க்கிறோம் 
ஜூலை வா ! கொடுமைகளை எரிக்க எங்களுக்கு 
அக்கினி ஜுவாலைகளை தா !தா !

S.MEENAKSHI SUNDARAM
DIVISIONAL SECRETARY,
NAGAPATTINAM

Friday 30 June 2017

பணி ஒய்வு !!!!!!!!!!!

காரைக்கால் பகுதி அஞ்சல் மூன்றின் செயல் வீரரூம், அம்பகரத்தூர் துணை அஞ்சலக தலைவருமான திரு.R.செல்வராஜ், திருவாரூர் அஞ்சல் நான்கின் செயல் வீர்ரும், திருவாரூர் தலைமை அஞ்சலக தபால்காரருமான திரு.C.கலியபெருமாள் மற்றும் MTS-மான திரு.S.துரைராஜ் ஆகிய மூவரும் 30.06.2017 அன்று பணி ஒய்வு பெறுவதால், எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கிறோம்.

வாழ்த்துக்களுடன்
NFPE-P3,P4 & GDS

நாகப்பட்டினம் & திருவாரூர்

Monday 26 June 2017

HAPPY RAMZAN



Saturday 24 June 2017

Cabinet to take final call on higher allowances, HRA on June 28

The Union Cabinet is expected to take final call on proposals related to higher allowances, including HRA (House RentAllowance), under the 7th Pay Commission, on June 28. The central government employees are likely to get higher allowances as per the 7th Pay Commission from July. However, the central government employees have been demanding arrears on higher allowances, but the government is in no mood to accept this demand. While the salaries of central government employees have been hiked as per the 7th Pay Commission, revised higher allowances haven’t been paid since July last year.


On June 28, the Cabinet would take up the proposals made by the Empowered Committee of Secretaries (E-CoS), whichscreened the report of the Ashok Lavasa committee on higher allowances under 7th Pay Commission. If media reports are to be believed, the Ashok Lavasa led Committee on Allowances stuck with the 7th Pay Commission’s recommendations on higher allowances. It simply means, there could be no hike in higher allowances. The HRA under the 7thPay Commission is likely to be kept at 27 per cent of the basic pay.

Higher Allowances:

The central government employees should not expect any big announcement on higher allowances under the 7th Pay Commission because the Empowered Committee of Secretaries (E-CoS) hasn’t suggested any hike, according to reports. Sources in the Finance Ministry also said that the quantum of allowances may not vary from those proposed by the 7th Pay Commission and the government is not bound by the findings of the Empowered Committee of Secretaries. “The central government finally decided not to give any facility to central government employees better than the 7th Pay Commission recommendations. Accordingly, the government stuck withthe 7th Pay Commission recommendations on pay scales and advances and its implementation have been made forcefully,” sources in the Finance Ministry were quoted as saying.

HRA:

The E-CoS has suggested to keep the HRA rate at 24 percent, 16 percent and 8 percent of the Basic Pay for Class X, Y and Z cities respectively, as recommended by the 7th Pay Commission. The central government employees, however, demanded to retain HRA rate at 30 percent, 20 percent and 10 percent of Basic pay (pay in the pay band plus grade pay). A Financial Express report said the HRA in cities with population above 5 million could be 27 per cent of the basic pay. Shiv Gopal Mishra, chief of the National Joint Council of Action (NJCA), leadingthe 7th Pay Commission negotiations with the government, also said that there is a possibility of higher HRA than that recommended by the 7th Pay Commission.

Arrears:

The central government employees have demanded arrears on higher allowances as well, but the government neither accepted, nor rejected their demand. Shiv Gopal Mishra was unsure whether their demands about arrears on higher allowances under the 7th Pay Commission will be accepted.
Source : India.com

Friday 23 June 2017

AADHAR TRAINING

ஆதார் பதிவு மற்றும் மேலூட்டம் செய்வதற்கான பணிகள் அஞ்சல்துறை மூலம் செய்திட மத்திய அரசு பணித்துள்ளது. அதற்கான பயிற்சி அளித்து தேர்வும் நடத்தி சான்றளிக்க ஆதார் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. நமது கோட்டத்தில் தற்போது அங்கிகரிக்கப்பட்ட 60 எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அனத்து அலுவலகங்களும் வேலை பளு அதிகமாக உள்ளது, அனைவரும் அறிந்ததே. காலியிடங்களை நிரப்புவதற்கு நிர்வாகம் எந்த ஒரு முன் முயற்சியும் எடுக்காமல் புதிய, புதிய வேலை இனங்களை அறிமுகப்படுத்தி ஊழியர் வேலை பளுவினை அதிகரித்துள்ளது.

ஆதார் பதிவிற்கான ஆன்-லைன் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே மேற்கண்ட வேலையினை செய்ய பணிக்க படுவார்கள். தேர்ச்சி பெறாதவர்கள் தகுதி இல்லை என்று மேற்கண்ட பணியினை மேற்கொள்ள அனுமதி இல்லை.

வாழ்த்துக்களுடன்!!!!!

AIPEU GROUP-C,NAGAPATTINAM